தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு போன்றவற்றை மிகத் தீவிரமாக செய்து வருகிறார்கள்.அந்த விதத்தில் இன்றைய தினம் மக்கள் நீதி மையம்,திமுக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.இதனைத் தொடர்ந்து உங்கள் தொகுதிகள் ஸ்டாலின் என்ற ஸ்டாலினின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அந்த கட்சியின் தலைமை அறிவித்து இருக்கிறது.
தேர்தல் வரவிருப்பதை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டு அதனை செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த விதத்தில் ஸ்டாலின் தமிழகம் முழுவதுமே அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கும் விதமாக பயணத் திட்டத்தை வகுத்து இருந்தார்.
இதற்கிடையில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பரப்புரை நிகழ்ச்சியை தமிழகம் முழுவதிலும் நடத்தி வந்தார்.அதன் மூலமாக மக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து வந்தார்.அந்த குறைகள் சுமார் 100 தினங்களில் நிறைவேற்றப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சுற்றுப்பயணத்தின் ஆறாம் கட்ட சுற்றுப்பயணம் முன்னெடுக்கப்படுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.இதற்கிடையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் பரப்புரை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.