குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது என்றும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவ அரசிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா தொற்றினால் செயல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தொழில் நிறுவனங்கள், சிறு குறு ஆலைகள் என அனைத்து தரப்பினரும் பொருளாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,
தற்போது தளர்வுகள் உடன் ஆலைகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் பொது முடகத்தினால் இவ்வளவு நாட்களாக மூடி வைத்திருந்த ஆலைகளை தற்போது திறந்து பணி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையை திறந்த நாளன்றே, பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பெண்கள் உயிரிழந்தனர்.
மேலும், 10 பேர் காயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
“குறுங்குடி கிராமத்தில் பட்டாசு ஆலையில் தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது. 4 மாதங்களாக வருமானம் இன்றி மீண்டும் தொடங்கிய அன்றே விபத்து ஏற்பட்டிருக்கிறது!
கடலூர், குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது. 4 மாதங்கள் வருமானம் இன்றி மீண்டும் தொடங்கிய அன்றே விபத்து ஏற்பட்டிருக்கிறது!
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக; இறந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குக! pic.twitter.com/1QLeCIvnwC
— M.K.Stalin (@mkstalin) September 4, 2020
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக; இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்” என ஸ்டாலின் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.