நோய்த்தொற்று பரவல் ஊரடங்கு தளர்வு வழங்கலாமா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

0
138

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் சற்றே குறைந்து இருக்கிறது இருந்தாலும் 30 ஆயிரம் என்ற அளவில் ஒரு நாளைக்கு நோய்தொற்று ஏற்படுவதன் காரணமாக, அதனை குறைத்து எடை போட இயலாது என்ற சூழ்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் இயங்குவதற்கான தடை உத்தரவு அமல்படுத்தப்படுகின்றன.

மேலும் எதிர்வரும் 31ம் தேதி வரையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்றை நிலையை ஆய்வு செய்யவும் தமிழகத்தில் மேலும் தளர்வுகளை வழங்கலாமா? என்பது தொடர்பாகவும், ஆய்வு செய்வதற்காக இன்று சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது, இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் மிக விரைவில் அதற்கான அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது

Previous articleகுடியரசு தின விழா! வீரதீர செயல்களில் ஈடுபடுவோருக்கு பதக்கங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்!
Next articleதமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 29,976 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு! சுகாதாரத்துறை தகவலால் அதிர்ச்சி!