கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார்கள் அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து அந்த மாவட்ட ஆட்சியாளர் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்கள் இதற்குப் பிறகு தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூடியது ஆனால் அதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றம் வரை சென்று பார்த்தது ஆனாலும் அந்த நிறுவனத்தின் முயற்சி எடுபடவில்லை.
இந்தநிலையில் இப்பொழுது நாடு முழுவதும் மருத்துவ ஆட்சி சென்றால் குறை இருந்து வருகிறது காரணமாக தமிழகம் சார்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது ஆனாலும் மத்திய அரசிடமிருந்து போதிய உதவி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அனைத்துக்கட்சி கூட்டங்களை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க லாமா என்று ஆலோசனை செய்யப்பட்டது அந்த ஆலோசனை கூட்டத்தில் ஆக்சிசன் உற்பத்திக்காக மட்டுமே இந்த ஸ்டெர்லைட் ஆலையை திறந்து கொள்ளலாம் என்று அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆக்சிசன் தயாரிப்பதற்காக மட்டும் தலையை நடத்தலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அனுமதியும் கொடுக்கப்பட்டது.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆகவே அந்த கட்சியை சார்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் .
ஆனால் தமிழக அரசு முதலில் அந்த நிறுவனத்திற்கு இந்த ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. பின்பு நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு ஆக்சிசன் தயாரிப்பதற்காக மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்து இருக்கிறது. அதோடு நீதிமன்றமும் மாநில அரசுக்கு ஒரு சில கெடுபிடிகள் விதித்தாலும் வேறு வழியில்லாமல் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிசன் உற்பத்திக்காக மட்டும் திறந்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறது.
பொதுவாக இப்படி ஏதேனும் ஒரு செயலை செய்தால் அதற்கு முதலில் முட்டுக்கட்டை போடுவது எதிர்கட்சியான திமுக தான். இப்போது திமுகவே இதில் ஒருமித்த கருத்துடன் இருக்கிறது. ஆனால் அந்த கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக கட்சி போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது திமுக அதிர்ச்சி அடைய செய்தது.
இதற்கிடையில் கமல்ஹாசன் ஸ்டெர்லைட் போராட்டத்தில் தங்களுடைய உயிரைவிட்ட 13 பேரின் குடும்பமும் இந்த ஆட்சியாளர்களை மன்னிக்காது ஒரு அவசரகால நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வதால் திமுக ஒரு மகத்தான ஆட்சியால் தென்மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 16 மணி நேர மின்வெட்டு நிலவியது. தென்மாவட்ட மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு உள்ளானார்கள் அந்த சமயத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் பெரிய அளவில் நடைபெற்று வந்தது.
தென்மாவட்ட மக்கள் கூடங்குளம் அணு உலை திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. மின்சாரம் தேவை தான் ஆனால் கடல் வளத்தை அழித்து இடிந்தகரை மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்து தான் மின்சாரம் கிடைக்குமென்றால் அது தேவையே இல்லை என்பதே அவர்களுடைய மன எண்ணமாக இருந்து வந்தது. தூத்துக்குடி மக்களின் உணர்வுகளையும் எதிர்காலத்தையும் மதித்தே முடிவு எடுத்திருக்க வேண்டும் ஆனால் தமிழக அரசு அவ்வாறு செய்யவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இப்ப நோய்தொற்று காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஆக்சிசன் உற்பத்தி தேவை என்பதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. தமிழ்நாடு இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், நாட்டிற்கு கை கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம் ஆனாலும் அது தூத்துக்குடி மக்கள் உயிரை கொடுத்து நடத்திய போராட்டத்தை அர்த்தமற்றதாகி விட்டது என்பது வருத்தம் அளிக்கிறது. இந்த தொற்று காலத்தில் இன்னொரு பெரிய போராட்டத்திற்கான விதையை விதைத்திடும் இந்த அரசின் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.