பரபரப்பு! இன்று தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் தமிழகத்தின் மூன்றாவது அணி!

Photo of author

By Sakthi

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வந்த சமத்துவ மக்கள் கட்சி மற்றும் திமுக கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயக கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஒரு புதிய கூட்டணியை உண்டாக்கினார்கள்.

ஆகவே தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு மூன்றாவது கூட்டணி ஏற்பட்டது இந்த 2 கட்சிகளும் தன்னுடைய கூட்டணிக்கு வருமாறு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களுடைய அழைப்புக்கு நன்றி தெரிவித்து கமலஹாசன் ட்வீட் செய்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது அதில் சுமுகமான முடிவும் துடைப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இன்றையதினம் அந்தக் கூட்டணிக்கு தொகுதி பங்கீடு உடன்படிக்கை ஆனது இன்றையதினம் தொகுதிப் பங்கீடு இறுதியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.