திமுகவுடன் கைகோர்க்கும் மநீம! பிரஸ் மீட்டில் கமல் வெளியிட்ட தகவல்!
ஓராண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் அதற்கான ஆயத்த பணிகளை தற்போது இருந்தே தொடங்கி விட்டனர். எப்படி இந்த தேர்தலை எதிர்கொள்வது? எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என ஆலோசனை செய்ய ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில பணி தலைவர் அண்ணாமலை நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய உள்ளோம் என தெரிவித்தார்.
அதனையடுத்து இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி, நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் என்னென்ன எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் மற்றும் இதர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டமானது தனியார் ஆடம்பர விடுதியில் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து கமல்ஹாசன் மாவட்ட செயலாளர்களிடம் அறிவுரை வழங்கியதாக கூறினர். பின்பு கமல்ஹாசன் கூட்டணி குறித்து முக்கிய தகவலை வெளியிட்டார். அதில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் சரி கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் சரி தேர்தலுக்கான வேலைகளை நிர்வாகிகள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று கூறினார். இவர் கூட்டணி என்று கூறிய பொழுது திமுக தான் முதலில் அனைவருக்கும் நினைவுவிற்கு வந்தது.
ஏனென்றால் தற்பொழுது திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கமல்ஹாசனின் 234 ஆவது படம் தயாராக உள்ளது. இப்படத்தினால் கமல்ஹாசனும் உதயநிதியும் அதிகளவு நெருக்கத்தில் உள்ளனர் என அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசுகின்றனர். பாஜக வானதி சீனிவாசன் ஒரு பேட்டியில், கமல்ஹாசன் தான் தற்பொழுது உதயநிதியுடன் நெருக்கமாக உள்ளாரே கோவையில் மக்களுக்கு ஏற்படும் கோரிக்கைகளை கூறி உடனடியாக தீர்வு காண வேண்டியது தானே என்று விமர்சனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் கூட்டணி கட்சி என்று சொல்லாமல் சொல்லி இருப்பது திமுகவை தான் என அக்கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.