மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகிய மிக முக்கிய தலைவர்! அதிர்ச்சியின் உச்சத்தில் தலைமை!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சரத்குமார் அவர்களின் கட்சியான சமத்துவ மக்கள் கட்சியுடன் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மையம் மாபெரும் தோல்வியை சந்தித்தது. சரத்குமார் கட்சியின் நிலைமை பல இடங்களில் மிக மோசமாக இருந்தது.

மக்கள் நீதி மையம் தன்னுடைய மாபெரும் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசனின் நிர்வாகக் கொள்கையை எதிர்த்து அந்த கட்சியை சார்ந்தவர்கள் கட்சியிலிருந்து விலகிச் செல்வதாக அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு அந்த கட்சியை விட்டு தற்போது விலகி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இதன் காரணமாக, அந்த கட்சியை சார்ந்தவர்கள் மாபெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள் முன்னரே மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து அந்த கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் வெளியேறினார். அவரை அடுத்து பல முக்கிய நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. ஆனால் மகேந்திரன் விலகல் மட்டுமே அந்தக் கட்சியால் பகிரங்கமாக வெளியிடப்பட்டது.ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொருவராக அந்த கட்சியை விட்டு சென்றுவிடுவார்கள் இறுதியில் அந்தக் கட்சியே இருக்காது என்று ஒரு சிலர் தெரிவித்து வருகிறார்கள்.