விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடைகள் : அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

Photo of author

By Parthipan K

அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகளை தொடங்க இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தெரிவித்தார். சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை அலுவலகத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்தபோது, “தமிழகத்தில் விவசாயிகளுக்கு தேவையான பொருட்கள் தடையின்றி கிடைப்பதாகவும் கூறினார்”.பொதுமக்கள் நியாயவிலை கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதனை காக்கும் வகையில் நடமாடும் ரேஷன் கடைகளை அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார். இதுமட்டுமின்றி ரேஷன் கடைகள் மூடப்படுவதாக கூறுப்படும் தகவல் உண்மை அல்ல என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.