கொரோனா நோய் தொற்றால் வீட்டிலிருந்தே தனிமையில் உள்ள நோயாளிகளுக்கு திடீரென்று ஆக்சிஜன் தேவைப்பட்டால் மொபைல் ஆக்சிஜன் சர்வீஸ் என்ற ஒன்றை தொடங்கியுள்ளனர். வீட்டிற்கு வந்த ஆக்சிஜன் வழங்கும் இந்த திட்டம் மிகவும் பயனளிக்கும்.
கோவையில் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ளதால் படுக்கைகள் கிடைக்காமல் வீட்டிலேயே தனிமையில் இருப்பவர்கள் அதிகம். அவர்களுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்படும் பொழுது ஆக்சிஜன் தேவை என்றால் ஒரு நம்பருக்கு கால் செய்தால் வீட்டிற்கே வந்து ஆக்சிஜன் கொடுக்கும் சர்வீஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில், இந்த மொபைல் ஆக்ஸிஜன் சேவை துவங்கப்பட்டுள்ளது.படுக்கைகாக காத்திருக்கும் மக்கள் மூச்சுத் திணறல் ஏற்படும்போது ஆக்சிஜன் தேவைப்பட்டால் இந்த எண்ணிற்கு 94893 63107 கால் செய்து ஆக்சிஜன் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு வீட்டில் தனிமையில் உள்ளவர்களுக்கு இந்த மாதிரியான திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று மக்கள் கூறியுள்ளனர். என்னதான் கொரோனாவில் மனிதநேயம் இறந்தாலும் இதுபோல மனிதம் காக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.