கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் வாகனம் மீது விழுந்த செல்போன்! பரபரப்பான தேர்தல் களம்!
கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி மைசூர் நகரில் ஊர்வலமாக சென்ற போது பூக்களுடன் சேர்ந்து செல்போனும் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை பிரதமர் மோடி கர்நாடகவின் கோலார், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா, பேளுரு ஆகிய இரண்டு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மைசூர் நகரில் ஊர்வலமாக சென்ற போது பூக்களுடன் சேர்ந்து செல்போனும் வீசப்பட்டது பரபரப்பை உருவாக்கியது.
மேலும் பூக்களுடன் சேர்த்து செல்போனை வீசிய நபர் பாஜகவின் பெண் நிர்வாகி என்று போலீசார் கூறியுள்ளனர். பிரதமர் மோடியின் வாகனத்தின் மீது செல்போன் வீசிய பெண் தவறான நோக்கத்தை கொண்டிருக்கவில்லை என்றும் பிரதமர் மோடியை பார்த்த மகிழ்ச்சியில் பூக்களுடன் சேர்ந்து செல்போன்னையும் தவறுதலாக வீசியுள்ளார் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அவர்கள் எஸ்பிஜி பாதுகாப்பில் உள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது மேலும் எஸ்பிஜி அதிகாரிகள் அந்த பெண்ணிடம் செல்போனை திரும்ப ஒப்படைத்தனர். மேலும் அந்த பெண்ணை இன்று விசாரணைக்காக காவல் நிலையம் வர கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.