National

குழந்தைகளை சந்தித்த மோடி:பிரகாசமான முகம் எப்படி?குட்டிக்கதை சொல்லி ஊக்குவிப்பு !

குழந்தைகளை சந்தித்த மோடி:பிரகாசமான முகம் எப்படி?குட்டிக்கதை சொல்லி ஊக்குவிப்பு !

சாதனை செய்து விருது பெற்ற மாணவர்களை இன்று தனது இல்லத்தில் சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களை சந்திப்பை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் சந்திக்க தயார் என்ற மனநிலையில் கடந்த 6 ஆண்டுகளாக இருந்து வருகிறார். தன் வெளிநாட்டுப் பயனங்களுக்கு இடையில் இந்தியாவில் இருக்கும் நேரத்தில் தனது சந்திப்புகளை பிரதமர் இல்லத்தில் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று பல்வேறு துறைகளில் சாதனை செய்த மாணவர்களுக்கு ’பிரதான்மந்திரி பால் புரஸ்கார்’  என்ற விருது பெற்ற மாணவ மாணவிகளை தன்னுடைய இல்லத்தில் சந்தித்தார்.அப்போது அவர்களோடு மோடி தேநீர் அருந்தினார். அதன் பின்னர் மாணவர்களுடனான உரையாடலில் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடம் பேசிய மோடி, ’இங்கு வந்திருக்கும் மாணவர்களின் உழைப்பு எனக்கு ஆச்சர்யத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது’ எனக் கூறினார்

அப்போது மோடி தன்னுடைய முகம் எப்படி இந்த வயதிலும் பளபளப்பாக இருக்கிறது என்பதன் ரகசியத்தை மாணவர்களிடம் சொன்னார். அதை ஒரு குட்டிக்கதையாக சொன்ன மோடி ’என்னிடம் நண்பர் ஒருவர் ‘உங்கள் முகம் எப்படி இவ்வளவு பிரகாசமாக இருக்கிறது எனக் கேட்டார்?. நான் அவரிடம்  ‘கடுமையாக உழைப்பால் எனது முகத்தில் அதிகமாக வியர்வை உருவாகும். நான் அந்த வியர்வையோடே எனது முகத்தை மசாஜ் செய்வேன். அதனால் எனது முகம் பளிச்சென்று உள்ளது.’ எனக் கூறினேன். அது போல குழந்தைகளாகிய நீங்களும்  ஒருநாளைக்கு வியர்க்கும் அளவுக்கான வேலைகளை செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார். மோடியின் இந்த குட்டிக்கதை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Leave a Comment