பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய தமிழர்?

Photo of author

By CineDesk

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் விவசாயியான இவருக்கு திருமணமாகி பானுமதி என்ற மனைவியும் தீபா என்ற மகன் சதீஷ் சூரிய என்ற 2 மகன்களும் உள்ளனர் சங்கர் பிரதமர் நரேந்திர மோடி மீது நீண்டகாலமாக பெரிதும் ஈடுபாடு கொண்டவர் தன் சொந்த ஊரில் அவருக்கு ஒரு கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார்.

இதனால் தனது சொந்த செலவிலேயே தன் சொந்த இடத்தில் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டினார். தனது விவசாய நிலத்தில் மோடிக்கு கோவில் கட்டி சிலை அமைத்துள்ளார். தினமும் அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தி வருகிறார்.

பாஜக விவசாய சங்க தலைவராக இருந்து வரும் சங்கர் இது பற்றி கூறியதாவது பிரதமர் மோடியின் மீது சிறு வயது முதலே கொண்ட அன்பால் எந்தவித எதிர்பார்ப்பும் யாருடைய உதவியுமின்றி எனது சொந்த செலவில் கோவிலை கட்ட விரும்பினேன்.

தற்போது விவசாயத்தில் கிடைத்த வருமானம் ஒரு அளவு பணத்தைக் கொண்டு கோவில் கட்டும் பணியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். தற்போது கோவில் கட்டி முடித்து விட்டேன்.

மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம் கட்சிகளையும் தாண்டி மோடி ஒரு நல்ல மனிதர் என அவர் கூறினார். அந்த ஈர்ப்பில் தான் அவருக்கு நான் கோவில் கட்டினேன் என்று கூறினார்.