மூன்றாவது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராவார்… மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் பேட்டி… 

0
133

 

மூன்றாவது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராவார்… மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் பேட்டி…

 

நடக்விருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்பார் என்று மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் கூறியுள்ளார்.

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 5வது ஆண்டு நினைவு தினம் இன்று(ஆகஸ்ட்16) அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் வாஜ்பாய் அவர்களின் நினைவிடத்தில் மத்திய அமைச்ஞர் அனுராக் தக்கூர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் அவர்கள் 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பார் என்று கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் அவர்கள் “கோடிக் கணக்கான மக்களின் மனதில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் இடம் பிடித்தார். பல தலைமுறைகளுக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் முன்மாதிரியாக இருந்தவர்” என்று செய்தியாளர்களிடம் பேசினார்.

 

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தக்கூர் அவர்கள் “பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கூட்டணிக் கட்சிகள் சேர்ந்துள்ளது. பாஜக கட்சி அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

 

நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டியிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வெற்றி பெறச் செய்வோம். 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெறுவார். மூன்றாவது முறையாக பிரதமராவார். இந்தியா பிரதமர் மோடியின் கீழ் மேலும் வளர்ச்சி அடையும்” என்று கூறினார்.

 

Previous articleகட்டிடத்தின் மேல் சண்டையிட்டு விளையாடிய குரங்குகள்… அதிர்வு தாங்காமல் இடிந்த கட்டிடம்… 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…
Next articleவைரலாகும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ போஸ்டர்! இரு வேடங்களில் நடித்துள்ளாரா?