கட்டிடத்தின் மேல் சண்டையிட்டு விளையாடிய குரங்குகள்… அதிர்வு தாங்காமல் இடிந்த கட்டிடம்… 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

0
36

 

கட்டிடத்தின் மேல் சண்டையிட்டு விளையாடிய குரங்குகள்… அதிர்வு தாங்காமல் இடிந்த கட்டிடம்… 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

 

உத்திரப் பிரதேசம் மாநிலம் மதுரா கோவில் அருகே கட்டிடத்தின் மேல் பகுதியில் குரங்குகள் சண்டையிட்டு விளையாடியதில் அதிர்வு தாங்காமல் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடுபாடுகளில் சிக்கி பரிதாபமாக 5 பேர் பலியாகி உள்ளனர். பலியான 5 பேருக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உத்திரப் பிரதேச மாநிலம் மதுராவில் விருந்தாவன் கோட்வாலி பகுதியில் விஷ்ணு ஷர்மா என்பவருக்கு சொந்தமான இரண்டு மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த அடுக்கு மாடி கட்டிடத்தின் மேல் பகுதி மிகவும் சேதமடைந்து உள்ளது.

 

இந்த சேதமடைந்த கட்டிடத்தின் மேல் சில குரங்குகள்.சேட்டைகளை செய்து கொண்டிருந்தது. இதனால் அதிர்வு தாங்காத வீட்டின் மேல் பகுதி இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் மேல்பாதி இடிந்து விழுந்ததில் 11 பேர் இடிபாடுகளில் சிக்கினார்.

 

இடுபாடுகளில் சிக்கிய 11 பேரை மீட்கும் பொழுது கட்டிடத்தின் மற்றொரு சுவரும் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடுபாடுகளில் சிக்கி கான்பூரை சேர்ந்த கீதா கஷ்யப், அரவிந்த் குமார் யாதவ், ரஷ்மி குப்தா, விருந்தாவனம் பகுதியை சேர்ந்த அஞ்சு முர்கன், தியோரியாவை சேர்ந்த சந்தன் ராய் ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் விபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவும் விபத்து நடந்த பகுதியில் போர்கால அடிப்படையில் செயல்பட்டு நிவாரணப் பணிகளை செய்யவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.