முழு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய முகமது ஷமியின் மனைவி!

Photo of author

By CineDesk

முழு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய முகமது ஷமியின் மனைவி!

பிரபல கிரிக்கெட் வீரரான முகமது ஷமியின் மனைவி அசின் ஜஹான் தனது கணவர் முகமது ஷமியுடன் இதற்கு முன்பு எடுத்த தனது நிர்வாண புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி. இவருக்கும் ஹசின் ஜகானுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஹசின் ஜஹான் முகமது ஷமி மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

மேலும் முகமது ஷமி மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபட்டதாக அவர் மனைவி குற்றம் சாட்டினார். இதனையடுத்து விசாரித்த பிசிசிஐ., ஷமி அவர் மனைவி கூறியது போல எவ்வித மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்தது.

இந்நிலையில் முகமது ஷமியிடமிருந்து பிரிந்து ஹசின் ஜகான் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். திருமணமான இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஹசின் ஜகான் ஷமியை பிரிந்து வாழ்ந்து வருவதால் மீண்டும் தன்னுடைய மாடலிங் தொழிலுக்கு திரும்பியுள்ளார். மேலும், மாடலிங் செய்யும் பொது படு கிளாமராகவும் போஸ் கொடுத்து வந்தார். இதனையடுத்து இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மத்தியில் இவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

https://www.instagram.com/p/CACPFNpgvli/?utm_source=ig_web_copy_link

இந்நிலையில் கிட்டத்தட்ட முழு நிர்வாணமாக உள்ளவாறு ஒரு புகைப்படத்தை ஹசின் ஜகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும்அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

உன் கையில் ஒன்றுமே இல்லாத போது நான் சுத்தமானவளாக தெரிந்தேன். தற்போது நீ ஒரு பெரிய ஆளாக இருக்கிறாய். இந்த நிலையில் நான் உனக்கு சுத்தம் இல்லாதவளாக இருக்கிறேன். அந்த அளவிற்கு சென்று விட்டேனோ? பொய்கள் எப்போதும் உண்மைகளை மறைத்து விட முடியாது. முதலைக் கண்ணீர் தான் நீண்ட நாட்களுக்கு நீடிக்கிறது என்ற அர்த்தத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CAz8OYjA0nJ/?utm_source=ig_web_copy_link

ஹசின் ஜகான் வெளியிட்ட இந்த புகைப்படத்தை பார்த்த முகமது ஷமியின் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் அவர் வெளியிட்ட இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது.