உலகக் கோப்பையில் பூம்ராவுக்கு பதில் இவர்தான்… அறிவித்தது பிசிசிஐ!

Photo of author

By Vinoth

உலகக் கோப்பையில் பூம்ராவுக்கு பதில் இவர்தான்… அறிவித்தது பிசிசிஐ!

Vinoth

உலகக் கோப்பையில் பூம்ராவுக்கு பதில் இவர்தான்… அறிவித்தது பிசிசிஐ!

இந்திய அணிக்காக உலகக்கோப்பையில் பூம்ராவுக்கு பதில் விளையாடும் வீரர் யார் என்பதை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணிக்கு டி 20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது பூம்ராவின் விலகல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.

அவருக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படாமல் இருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் இவர்கள் மூவரும் ஆஸ்திரேலியாவுக்கும் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்நிலையில் இப்போது முகமது ஷமி பூம்ராவுக்கு பதில் உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக ஷமி டி 20 போட்டியில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில்தான் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் இப்போது நேரடியாக இந்திய அணிக்குள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணி வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தானை தங்களது முதல் உலகக்கோப்பை போட்டியில் எதிர்கொள்கிறது. இந்திய அணி இப்போது ஆஸ்திரேலியாவில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.