சம்பளம் இல்லாமல் பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன்!!மகன் பிரணவ் மோகன்லால் குறித்து தாய் கூறும் தகவல்!!

Photo of author

By Gayathri

நடிகர் மோகன்லால் உடைய மகனான நடிகர் பிரணவ் மோகன்லால் ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் சம்பளம் எதுவும் இன்றி வேலை பார்த்து வருவதாக அவருடைய தாயார் தெரிவித்திருக்கிறார்.

Youtube சேனல் ஒன்று இருக்கு பேட்டி அளித்த சுசித்ரா மோகன்லால் அவர்கள் தன்னுடைய மகன் குறித்து கூறியிருப்பதாவது :-

அப்பு, இப்பொழுது ஸ்பெயின் நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக என் மகன் சம்பளம் எதுவும் வரவில்லை என்றும், அங்குள்ள குதிரைகள் மற்றும் ஆடுகளை அவர் கவனித்து வருகிறார் என்றும் பிரணவ் மோகன்லாலின் தாயார் தெரிவித்திருக்கிறார்.

அங்கு அவருக்கு கிடைக்கும் புதிய அனுபவங்களை வீடு திரும்பும் பொழுது என்னுடன் பகிர்ந்து கொள்வார் என்றும் சுசித்ரா மோகன்லால் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், அவர் ஆண்டுக்கு இரண்டு படம் நடிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால், அவர் இரண்டு ஆண்டுக்கு ஒரு படம்தான் நடிக்கிறார். அனைத்தையும் பேலன்ஸ் செய்ய வேண்டும் என அவர் விரும்புகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று இருக்கு, நான் என்னுடைய கணவரும் மகனும் இணைந்து நடிக்க வேண்டும் என ஒரு போதும் நினைத்ததில்லை. அவ்வாறு இணைந்து நடித்த யாருடைய நடிப்பு சிறந்தது என்று எண்ண எனக்கு கவலையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பிரணவ் மோகன்லால் அவர்கள் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், 2015 ஆம் ஆண்டு உதவி இயக்குனராகவும் வளர்ந்திருக்கிறார்.அவர் நடிப்பில் கடந்த 2018-ல் ‘ஆதி’ திரைப்படம் வெளியானது. 2022-ல் ஹிருதயம், கடந்த ஏப்ரல் மாதம் வர்ஷங்களுக்கு சேஷம் படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.