அம்மா நான் விஷம் குடிசிட்டேன் அம்மா! 17 வயது சிறுமி எடுத்த முடிவு!

Photo of author

By Kowsalya

கடலூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி செல்போன் பார்த்து கொண்டிருந்ததை சிறுமியின் தாய் கண்டித்ததால் கோபத்தில் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் புருஷோத்தமன் என்ற  பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். தாய் லட்சுமி ஆடு மாடு மேய்த்து வருகிறார். இவருடைய மகள் செந்தமிழ். இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். இவர் எப்பொழுதும் செல்போனை பார்த்து கொண்டுள்ளார். எந்த வேலை செய்யாமல் மொபைலை நொண்டி கொண்டு இருந்துள்ளார்.

இதை கவனித்து வந்த சிறுமியின் தாயார் எப்பொழுதும் செல்போனை பார்த்து கொண்டுள்ளாய் என திட்டியுள்ளார். பின் லட்சுமி ஆடு மேய்க்க சென்றுள்ளார். மாலையில் வீடு திரும்பிய லட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அப்பொழுது செந்தமிழ் வாந்தி மயக்கத்துடன் இருந்துள்ளார். லட்சுமி பதறி போய் என்ன  நடந்தது என்று கேட்டுள்ளார். அதற்கு அம்மா நான் விஷம் குடித்து விட்டேன் என்று கூறியுள்ளார். லட்சுமி கதறி அழுதுள்ளார்.

பின் லட்சுமி அக்கம் பக்கத்தில் உள்ளோரை அழைக்கவே அவர்களின் உதவியுடன் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக செந்தமிழ் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி செந்தமிழ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி போலீசில் லட்சுமி அளித்த புகாரின் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.