சிவ பெருமானுக்கு உகந்த மாதமான கார்த்திகையில் வரும் திங்கட்கிழமை நாளில் விரதம் கடைபிடிப்பதை தான் சோமவார விரதம் என்பார்கள்.சோமன் என்றால் சந்திரன் என்று அர்த்தம்.சிவபெருமான் தலையில் உள்ள சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்ததால் தான் சிவனின் தலையில் நீங்கா இடம் பெற்றான்.சந்தினருக்கு உரிய திங்கட்கிழமை நாளில் இந்த சோமவார விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.இந்நாளில் வீட்டில் சிவனுக்கு பூஜை செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்ய முடியாதவர்கள் சிவன் கோயிலுக்கு சென்று சோமவார விரத பூஜை செய்யலாம்.இப்படி சோமவார விரதம் இருந்தால் சிவனிடம் கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்திற்கு ஆடிபெருகு எப்படி சிறப்பான ஒன்றோ அதேபோல் தான் கார்த்திகை மாதத்திற்கு சோமவார விரதம்.சிவ பெருமானுக்காக இருக்கப்படும் எட்டு விரதங்களில் மிக முக்கிய விரதம் சோமவார விரதம்.
உங்களின் எண்ணங்கள் நிறைவேற இந்நாளில் விரதம் இருந்து சிவ பெருமானை வழிபட வேண்டும்.சிவ பெருமானிடம் வேண்டிக் கொண்ட விஷயங்கள்,தடைபடும் விஷயங்கள் அனைத்தும் நடக்க இந்நாளில் விரதம் இருந்து வழிபடலாம்.
நோயின்றி வாழ,திருமணத் தடை நீங்க,நல்ல வேலை கிடைக்க வேண்டி இந்நாளில் சிவனுக்கு விரதம் இருக்கலாம்.கார்த்திகை மாதத்தில் மொத்தம் ஐந்து சோமவாரங்கள் இருக்கிறது.இந்த ஐந்து வார சோமவார நாட்களில் விரதம் இருந்து சிவனை வழிபடலாம்.
சோமவார விரதம்
அதிகாலை நேரத்தில் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு வீட்டில் உள்ள சிவபெருமான் திருவுருவ படத்திற்கு வில்வ இலைகளால் மாலை சூட்டி அர்ச்சனை செய்ய வேண்டும்.பிறகு ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றவும்.
பிறகு பால்,பழம்,கற்கண்டு போன்ற பொருட்களை படைத்து விரதம் இருந்து வழிபட வேண்டும்.முடியாதவர்கள் பால் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.பிறகு மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் நெய் தீபம் ஏற்றி சிவனை வழிபட்ட பிறகு விரதத்தை முடிக்கலாம்.இப்படி விரதம் இருந்தால் சிவனிடம் கேட்டது நிறைவேறும்.