ஐடி ரெய்டில் கட்டுகட்டாக சிக்கிய பணம்! பின்னணியில் இருப்பது யார் தெரியுமா?

Photo of author

By Rupa

ஐடி ரைடில் கட்டுகட்டாக சிக்கிய பணம்! பின்னணியில் இருப்பது யார் தெரியுமா?

தற்போது பல இடங்களில் மாளிகைகள் போல அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டு அதனை விற்பனை செய்தும் வருகின்றனர்.இதில் பல ஊழல்கள் நடக்கிறது.அப்பாவி மாக்களிடமிருந்து இடத்தை பறித்து அதில் வீடுகளை கட்டி பல கோடிகணக்கான பணத்தை சம்பாரித்து வருகின்றனர்.அதே போல தான் திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் விமான நிலயதிற்கு அருகாமையிலேயே அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர்.அவர்களுக்கென்று மொராய்சிட்டி என்ற தனி பெயரும் உண்டு.

இந்த குழுவினர் அங்குள்ள அக்கம் பக்கம் இருக்கும் அப்பாவி மக்களிடமிருந்து அவதூரான முறையில்  நிலத்தை வாங்கிக் கொள்கின்றனர்.அவர்கள் தர மறுத்தால் அவர்களை அடித்து குறைந்த விலைக்கு நிலத்தை அவதரித்து விடுகின்றனர்.இது வெகு நாட்களாக நடந்துக்கொண்டிருக்கும் நிலையில்,இவரால் பாதிகப்பட்ட ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதுமட்டுமின்றி இந்த உரிமையாளர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறுகின்றனர்.

இதனையடுத்து நேற்று காலை மொராய்சிட்டியில் வருமானத்துறையினர்  சோதனையை நடத்தினர்.நேற்று நடந்த முதல் கட்ட தேடலிலேயே கணக்கில் காட்டப்படாத பணங்கள் சிக்கியதாக தெரிவித்துள்ளனர்.அத்துடன் அந்த சோதனை இன்றும் தொடர்ந்து  நடப்பாதாக கூறி வருகின்றனர்.மேலும் கே.கே நகரில் இருக்கும் அவரது  அலுவலகத்திலும் சோதனை நடந்து வருவதாக தெரிகிறது.இன்னும் பல கணக்கில் காட்டாத ஆவணங்கள் ,பணங்கள் சிக்கும் என பேசுகின்றனர்.இவருக்கு பினால் மிகப்பெரிய முக்கிய புள்ளி இருக்ககூடலாம் என கூறி வருகின்றனர்