எதிர்க்கட்சிகளின் கடும் வாக்குவாதத்தால் மூன்று நாட்கள் தொடர்ந்து முடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்!!

0
107
Monsoon Session of Parliament stalled for three consecutive days due to fierce arguments by opposition parties!!
Monsoon Session of Parliament stalled for three consecutive days due to fierce arguments by opposition parties!!

எதிர்க்கட்சிகளின் கடும் வாக்குவாதத்தால் மூன்று நாட்கள் தொடர்ந்து முடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்!!

ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த கூட்டத்தில் மணிப்பூர் விகவரம், மத்திய அரசின் அவசர சட்டம், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது, மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மௌனம் சாதிப்பது, வணிகம், ஒரே மாதிரியான சிவில் சட்டம் இன்னும் பல விவகாரங்களை பற்றி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளார்கள்.

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார். இந்த பிரச்சனை இனக் கலவரமாக மாறி கடந்த இரண்டு மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.

இதனையடுத்து  மழைக்கால கூட்டத் தொடரில் மணிப்பூர் வன்முறை பற்றி விவாதம் நடத்த உள்ளதாக ஏற்கனவே எதிர்கட்சிகள் அறிவித்திருந்தது.  இந்த நிலையில் கலவரத்தில் மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமையைப் பற்றி விவாதிக்க இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் வாக்கு வாதத்தியில் ஈடுப்படனர். இதனால் முதல் நாள் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும் , நாடாளுமன்ற மக்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் 2 வது நாளாக மணிப்பூர் விவரத்தை வைத்து அமளியில் ஈடுப்பட்டுள்ளார்கள். மேலும் இரண்டாவது நாளும்  இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களவை 12 மணிவரையும் மாநிலங்களவை 2.30 மணி வரையும் ஒத்தி வைப்பதாக அறிவித்திருந்து.

இந்த நிலையில் மூன்றாவது நாளாக தொடங்கிய மக்களவை மணிப்பூர் விவகாரத்தால் எதிர்க்கட்சிகள் அமலி. அதனால் மழைக்கால கூட்டத் தொடர் நாள் முழுவதும் ஒத்தி வாய்ப்பு. மேலும் பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்தி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி இதனால் மாநிலங்களவை ஒத்திவைப்பு. மேலும் நாளை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைப்பதாக அவை தலைவர் ஒம்பிரலா தெரிவித்துள்ளார்.

 

Previous articleஐந்து வேடங்களில் நடித்த நடிகருக்கு 50 கோடி சம்பளம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!
Next articleஇளைஞர் வெட்டிக்கொலை!! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்!!