நிறைவு பெற்றது சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர்! என்னென்ன சட்டங்கள் நிறைவேற்றப்பட்டனர்?

Photo of author

By Sakthi

[8:32 pm, 19/10/2022] Lover Of Love: அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் மருத்துவ இட ஒதுக்கீட்டிற்கு இன்று கவுன்சிலிங்!
[8:44 pm, 19/10/2022] Lover Of Love: தமிழக சட்டசபை கடந்த 17ஆம் தேதி ஆரம்பமாகி நேற்று நிறைவு பெற்றது. நேற்று முன்தினம் 5 மற்றும் நேற்றைய தினம் 7 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டனர். இதில் மிகவும் முக்கியமானது ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்.

இணையதள விளையாட்டு குறித்த சட்டம் இயற்ற ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் இணையதள சூதாட்டங்களை தடை செய்ய அரசு தீர்மானித்தது.

இதற்காகவும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்தவும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அவசர சட்டத்திற்கு அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இந்த நிலையில் இதற்கான சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டம் பணம் அல்லது மற்ற பந்தய பொருட்களை வைத்து இணையதள விளையாட்டில் ஈடுபடும் நபருக்கு 3 மாதம் வரையில் சிறை அல்லது 5000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வழிவகை செய்கிறது.

ஊடகங்களில் விளம்பரம் செய்யும் அல்லது விளம்பரம் செய்ய காரணமாக இருக்கும் நபருக்கு ஒரு வருடம் வரையில் சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இணையதள சூதாட்ட சேவை வழங்கும் நபருக்கு 3 வருட கால சிறை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிப்பதற்கு இந்த சட்டம் வழிவகை செய்யும்.

இதைத் தவிர தமிழ் பல்கலை துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்ட மசோதா, 2022 தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்டம் குறித்த மசோதா உட்பட 12 மசோதாக்கள் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டனர்.