அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் மருத்துவ இட ஒதுக்கீட்டிற்கு இன்று கவுன்சிலிங்!

0
72

இளநிலை மருத்துவ படிப்பிற்கான சிறப்பு பிரிவில் 65 இடங்கள் நிரம்பி உள்ளனர் அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இன்றைய தினம் நடைபெறுகிறது.

அரசு மற்றும் சுய நிதி கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்பிபிஎஸ் 1380 பி டி எஸ் இடங்கள் இருக்கின்றன. இதில் பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள கவுன்சிலிங் நேற்று ஆரம்பமானது.

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங் நேரடியாக சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 46 இடங்களும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவில் 11 இடங்களும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 8 இடங்களும் என்று 65 இடங்கள் நிரம்பினர். இவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டில் 454 எம்பிபிஎஸ் 104 பி டி எஸ் இடங்கள் இருக்கின்றன இவற்றுக்கான நேரடி கவுன்சிலிங் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இன்று நடைபெறுகிறது.

நிர்வாக ஒதுக்கீட்டில் இருக்கிற 1310 எம்பிபிஎஸ், 740 பிடிஎஸ் இடங்களுக்கான இணையதள கவுன்சிலிங் நாளைய தினம் ஆரம்பமாகிறது. அதோடு மேலும் விவரங்களுக்கு,www.tnhealth.tn.gov.in , tnmedicalsection.net உள்ளிட்ட இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.