மாநில பட்ஜெட்! பெண்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன நிதி அமைச்சர்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் 2021 22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட்டை என்று சட்டசபையில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். நோய்த்தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத் தில் இன்று ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை 10:00 மணி அளவில் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் இன்று காலை 10 மணி அளவில் சட்டசபைக்கு வருகைதந்த நிதியமைச்சர் பயணிகள் தியாகராஜன் காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தற்போதைய நிதியாண்டின் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.திமுக தலைவர் ஸ்டாலின் முதன் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார். இந்த நிலையில், இன்று அவர் ஆட்சியின் கீழ் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இது பலரையும் பல எதிர்பார்ப்புகளை எதிர்பார்க்க தூண்டி இருக்கின்றது.

இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கின்ற முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை இங்கே நாம் தெரிந்து கொள்வோம் அதாவது கருவூலங்கள் விரிவுபடுத்தப்பட்டு அரசு உள்ளாட்சி அமைப்புகள் பணம் செலுத்தும் வங்கிகளாக மாற்றம் செய்யப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நெசவாளர்கள் பயன்பெறும் விதத்தில் ஏழைகளுக்கான இலவச வேஷ்டி, சேலை திட்டத்திற்கு 490 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

எம்ஜிஆர் மதிய உணவுத் திட்டத்திற்கு 1725 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல திருநங்கைகள் பயன்பெறும் விதத்தில் ஓய்வூதிய திட்டத்திற்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.அதேபோல பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் மூலமாக புதிய சித்த மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு சித்தர்களின் அறிவாற்றல் மற்றும் பழமை வாய்ந்த மருத்துவ முறையான சித்த மருத்துவம் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் இல்லத்தரசிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்பதற்காகவே இதற்காக குடும்பத் தலைவரின் பெயரை மாற்றுவதற்கான அவசியமில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் தெரிவித்திருக்கிறார்.