மாத சிவராத்திரி விரதங்கள் தொடர்பாக மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாக சொல்கிறது. அதனை சுருக்கி இங்கே நாம் காணலாம்.
சித்திரை மாதம்- இந்த மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியால் வழிபடப்பட்டது.
வைகாசி மாதம்- இந்த மாதம் அஷ்டமி சிவராத்திரி சூரியபகவானால் வழிபடப்பட்டது.
ஆனி மாதம்- வளர்பிறை சதுர்த்தி சிவராத்திரி சிவபெருமானால் வழிபடப்பட்டது.
ஆடி மாதம்- தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.
ஆவணி மாதம்- வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.
புரட்டாசி மாதம் – வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதிசேஷனால் வழிபடப்பட்டது.
ஐப்பசி மாதம் – வளர்பிறை துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.
கார்த்திகை மாதம் – இரண்டு சிவராத்திரி வளர்பிறை சத்தமையும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவற்றை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.
மார்கழி மாதம் – வளர்பிறை தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.
மாசி மாதம் – தேய்பிறை தேவர்களால் வழிபடப்பட்டது.
பங்குனி மாதம் – வளர்பிறை குபேரனால் வழிபடப்பட்டது.
நாமும் சிவராத்திரியில் சிவபெருமானை வழிபடுவோம் அவருடைய பூரண அருளை பெறுவோம்.