கொரோனாவின் மூன்றாவது அலை உச்சம் பெறும் மாதங்கள்! மக்களே உஷார்!

Photo of author

By Hasini

கொரோனாவின் மூன்றாவது அலை உச்சம் பெறும் மாதங்கள்! மக்களே உஷார்!

தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையின் பாதிப்பு காரணமாக பல்வேறு உயிரிழப்புகளும், தொழில் முதலீடு இழப்புகளும், பொருளாதார இழப்புகளும் அனைவரும் சந்திக்கும் பெரும் சவாலாக உள்ளது. ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது சற்று நோய் தொற்றின் குறைவின் காரணமாக ஊரடங்கில், தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அது அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மக்கள் இன்னும் கட்டுப்பாடுகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஏனெனில் தற்போது டெல்டா ப்ளஸ் வகை கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது, என அறிவியலாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். எனவே மக்களிடம் இன்னும் சமூக இடைவெளி தொடர வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்கு மூன்று பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழுவானது மூன்றாவது அலை பாதிப்பு குறித்து, தற்போது கருத்துக்களை  கணித்துள்ளது. அது அந்தக் கருத்தின் அடிப்படையில் நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் தடுப்பூசியின் செயல் திறன் இழப்பு மற்றும் புதிய உருமாறிய கொரோனா வகைகள் என பல்வேறு காரணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாவதாக அலையின் தாக்கத்திற்கு முன் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

தற்போது தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தும் போது கொரோனாவின் மூன்றாம் மற்றும் நான்காம் அலைகள் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது, என்றும் மூன்றாவது அலை பாதிப்பின் போது, பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் என்ற அளவில் இருக்க வாய்ப்புள்ளது, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலையின் பாதிப்பு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சம் தொட வாய்ப்புள்ளதாகவும், பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை, எனில் மூன்றாம் அலையின் போது தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரை உயரும் அளவுக்கு வாய்ப்புள்ளது.

இவையெல்லாம் அந்த கருத்துக்கணிப்பின் மூலம் கூறப்படுகிறது. ஏனெனில் இரண்டாவது அலையின் உச்சத்தில் அதாவது மே மாதத்தின் போது பதிவான தினசரி பாதிப்பின் அளவு 414188 என்ற அளவில் பதிவாகியுள்ளது குறிப்பிடப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் கூடியமட்டும் சமூக இடைவெளியை பின்பற்றவும், முகக் கவசங்கள் அணிந்து வெளியே செல்லவும் கண்டிப்பாக பழகிக்கொள்ளவேண்டும். முடிந்தவரை வெளியில் அதிகம் போகாமல் இருப்பது பரவாயில்லை என்றும் கூறலாம்.