பாலியல் புகாரால் தலைமறைவான பாபா! அதிரடி காட்டிய போலீசார்!

0
82
Baba hidden in sexual harassment complaint! Police in action!
Baba hidden in sexual harassment complaint! Police in action!

பாலியல் புகாரால் தலைமறைவான பாபா! அதிரடி காட்டிய போலீசார்!

பாபா என்ற பெயர் வைத்தாலே அப்படித்தான் இருப்பார்கள் போல. பாபா என்ற பெயரில் தான் பல போலி சாமியார்கள் போலிசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்கள் குறிப்பாக ஏதோ ஒரு இடத்தில் ஆஸ்ரமத்தை ஆரம்பித்து நான் பாபா என்றும் எனக்கு கடவுளின் அருள் பரிபூரணமாக இருக்கிறது. வாருங்கள் உங்களுக்கு மருந்து தருகிறேன் என்று கூறினால், போதும் நமது மக்களும் அவர்களிடம் படையெடுத்து செல்கின்றனர்.

அப்படி பீகார் மாநிலத்தில் மிதாபூரில், உள்ள கயா கும்தி, பர்மாவில் வசித்து வந்த ஒரு நபர் தான் பாபா என்ற சாமியார் சச்சிதானந்தா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பஸ்தி மாவட்டத்தில், செல்கராவில், ஆசிரமம் ஒன்றை அமைத்து மக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வந்துள்ளார்.

இவரை அப்பகுதியினர் தயானந்தா என்றும், பிரசாந்த் குமார் என்றும், சாந்தகுமார் என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆசிரமத்தில் இருந்த பெண் பக்தை ஒருவரை, சாமியார் சச்சிதானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் ஒன்று எழுப்பப்பட்டது. அந்த பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் பலாத்கார வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்.

ஆனால் வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து சாமியார் தலைமறைவாக இருந்து வந்தார். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வரை பிடிப்பதற்காக போலீசார் எல்லாவிதமான முயற்சிகளும் செய்தனர். கடைசியாக அவர் கிடைக்காத காரணத்தினால் அவரைப் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு 50,000 சன்மானம் வழங்கப்படும் என்று கிராம மக்களிடம் அறிவித்து இருந்தனர். இதற்கிடையே இவர்களது சீடர்களான பரமச்சேதானந்தா மற்றும் ஊர்மிளா பாய் ஆகியோரை கடந்த 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பாபனன் ரயில் நிலையம் அருகே போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநில போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மொராதாபாத்யில், பதுங்கி இருந்த பாபாவை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் எஸ்பி ஆஷிஷ் வாஸ்தவா, அவர்கள் கூறுகையில் கடந்த மூன்றரை வருடங்களாக தலைமறைவாக இருந்த பாபாவை போலீசார் கைது செய்து பஸ்தி போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். இவர் தனது ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு ஆசியுரை, பிரசாதம் என்ற பெயரில் அவர்களை வசியம் செய்துள்ளார்.

பின்னர் அவர்களில் சிலரை ஆசிரம பெண் சீடராக பணியிலும் அமர்த்திக் கொண்டுள்ளார். அவ்வாறு அங்கு பணியாற்றி வந்த ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இவர்களது சீடர்களும் அவர்களில் சிலரும் பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாகவும் கூறினார். இவர்கள் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

பீகார், உத்திரப்பிரதேசம் மட்டுமின்றி டெல்லியில் உள்ள ஆசிரமத்திற்கும் பெண்களை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தற்போது கைதான பாபாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் எனவும் கூறினார்.