மூச்சு பிடிப்பு முதுகு வலி உள்ளதா? இதை செய்யுங்க.. உடனே சரியாகிவிடும்..!!

Photo of author

By Priya

Moochu Pidippu: நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். ஏதாவது கடினமான பொருளை தூக்கினால் திடீரென்று முதுகு வலிக்கும். அதன் பிறகு அவர்களுக்கு முது வலித்துக்கொண்டே இருக்கும். மூச்சிவிடுவதில் சிரமமாக உணர்வார்கள். என்னாச்சி என்று கேட்டால் முதுகில் மூச்சு பிடித்துவிட்டது என்று கூறுவார்கள்.

ஆனால் முதுகில் தசைப்பிடிப்பை தான் அனைவரும் முதுகில் மூச்சு பிடித்து விட்டு என்று கூறுகிறோம். இது பெரும்பாலும் நீண்ட நேரம் பயணத்தினாலும் ஏற்படும். முதுகு, கழுத்து, மார்பு பகுதி போன்ற இடங்களில் இந்த பிடிப்பு ஏற்படும். இதனை எவ்வாறு சரி செய்யலாம் என்று இந்த பகுதியில் (moochu pidippu vaithiyam பார்க்கலாம்.

மூச்சு பிடிப்பு அறிகுறிகள்

மூச்சு பிடித்து விட்டால் அவர்களுக்கு மூச்சை உள்ளிழுக்க முடியாது. மேலும் மூச்சை உள்ளிழுக்கும் போது அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். பெருமூச்சு விட்டால் வலிக்கும்.

மேலும் இவர்களால் சாதாரணமாக சிரிக்க கூட முடியாது. சிரித்தால் திடீரென்று வலிக்கும்.

மூச்சு பிடிப்பு ஏற்பட காரணம்

  • மூச்சை பிடித்துக் கொண்டு ஏதாவது கடினமான பொருட்களை தூக்கினால் இவ்வாறு ஏற்படும்.
  • மேலும் விளையாடும் போது ஏதாவது காயம் ஏற்பட்டால் இது போன்று ஏற்படும்.
  • மேலும் சளி தொல்லையினாலும் இந்த மூச்சு பிடிப்பு ஏற்படும்.

எவ்வாறு சரிசெய்யலாம்

தேவையான பொருட்கள்

வெற்றிலை – 1
பெருங்காயம் – சிறிதளவு

வெற்றியிலையில் சிறிதளவு பெருங்காயத் தூளை வைத்து மென்று வர மூச்சு பிடிப்பு சரியாகிவிடும்.

தேவையான பொருட்கள்

வடித்த கஞ்சி – ஒரு பவுல்
பெருங்காய தூள் – 1 ஸ்பூன்
சுக்கு – 1 ஸ்பூன்
கற்பூரம் – 1 ஸ்பூன்
சாம்பிராணி தூள் – 1 ஸ்பூன்

செய்முறை

அடுப்பை பற்ற வைத்து வடித்த கஞ்சியை ஒரு கடாயில் ஊற்றி இவை அனைத்தையும் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதிக்க வைத்து சூடு பொறுக்கும் அளவிற்கு எடுத்து கொண்டு அதனை மூச்சுப்பிடிப்பு உள்ள இடங்களில் வைத்து ஒத்தடம் கொடுத்து வர மூச்சுப்பிடிப்பு சரியாகிவிடும்.

மேலும் படிக்க: பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை கொண்ட இந்த பூ பற்றி தெரியுமா? துன்பத்தை போக்கும் தும்பை..!!