தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் கடந்த மே 7-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து மற்ற தளர்வுகள் அழைக்கப்பட்டாலும் சென்னையில் மதுக்கடைகள் மட்டும் திறக்கப்பட அனுமதி மறுத்து வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையிலும் மதுக் கடைகள் திறக்கப்பட அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 250.25 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் சென்னையில் மட்டும் 50.65 கோடிக்கும் மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக 52.56 கோடிக்கும் திருச்சியில் 51.27 கோடிக்கும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு மிகப்பெரிய வசூலை எட்டியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைவரும் உணவுக்கே வழியில்லாத நிலையில் டாஸ்மாக்கை திறந்து வைத்து லாபம் பார்க்கும் அரசை நெட்டிசன்கள் சரமாரியாக திட்டி வருகின்றனர்.