ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட குட் நியூஸ்!
கடந்த 2022 ஆண்டு முதல் மின்சார துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் மின்சாரத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.
இந்த இணைப்பை மேற்கொள்ளாதவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் வழங்குவதில் சிரமம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மின்சார துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி கூறுகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2.67 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கும் முடிவடைந்துள்ளது.
67 ஆயிரம் பேர் மட்டும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். மின்சார வாரியத்தை பொருத்தவரை முன்னதாகவே பெறப்பட்டுள்ள மின் இணைப்புகளின் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. ஒருவருக்கு எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும் அவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இந்த ஆண்டு கோடை காலத்தில் உச்சபட்ச மின் தேவை 18,500 மெகா வாட்டாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க மின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டை பொருத்தவரையில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரமானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகின்றது. அடுத்த ஆண்டு முதல் அடிப்படை கட்டமைப்புகளை வலிமைப்படுத்தி கோடைகாலத்தில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க தேவையான பணிகளை மின்வாரியம் தொடங்கியுள்ளது என கூறினார்.
முன்னதாகவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானே, நிர்வாக இயக்குனர் ஆர் மணிவண்ணன், இயக்குனர் மா சிவலிங்கராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.