ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள்! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி முதலிடம்!!

0
157
#image_title
ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள்! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி முதலிடம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோஹ்லி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நேற்று அதாவது மே 21ம் தேதி நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோஹ்லி அவர்கள் அதிரடியாக விளையாடி 61 பந்துகளில் சதமடித்து 101 ரன் சேர்த்தார். இந்த சதம் ஐபிஎல் வரலாற்றில் விராட் கோஹ்லியின் ஏழாவது சதமாகும். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோஹ்லியின் இரண்டாவது சதம் ஆகும்.
இதையடுத்து ஐபிஎல் போட்டிகளில் 7வது சதத்தை அடித்த விராட் கோஹ்லி அவர்கள் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 62 பந்துகளில் 6வது சதத்தை பதிவு செய்து கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்தார். நேற்றைய போட்டியில் மேலும் ஒரு சதம் அடித்து கிறிஸ் கெயிலின் சாதனையை விராட் கோஹ்லி அவர்கள் முறியடித்துள்ளார்.
தற்போது ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோஹ்லி 7 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். விராட் கோஹ்லியை தொடர்ந்து கிறிஸ் கெயில் 6 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்லர் 5 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
author avatar
Savitha