Most Desirable Women 2020 யார் தெரியுமா? அதுவும் ‘Google ‘ இவருக்கு தந்த பெயர் என்ன தெரியுமா?

Photo of author

By Kowsalya

இந்தியாவில் மிகவும் விரும்பத்தக்க பெண் 2020 என்ற பட்டத்தை தூக்கிச் சென்றுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

2016 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இவர். இவர் தனது நடிப்பின் மூலம் உன் அழகின் மூலம் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கவர்ந்துள்ளார்.

இதனால் கூகுள் இவருக்கு ” National Crush” என்று பெயரைச் சூட்டி அறிவித்துள்ளது. National Crush என்று கூகிளில் தேடினாலே இவர் படம் தான் வருகிறது. அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் மிகவும் அழகான இடத்தை பிடித்துள்ளார் ராஷ்மிகா.

இப்பொழுது மீண்டும் இரண்டாவது முறையாக 2020 மிகவும் விரும்பத்தக்க பெண்    என்ற பட்டத்தை வென்றதன் மூலம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். . 2020 மிகவும் விரும்பத்தக்க மனிதர் என்ற பட்டியலில் கேஜிஎப் நடிகர் யாஷ் இடம் பெற்றுள்ளார்.

தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா அவருக்கு ஜோடியாக பாலிவுட் திரையில் மிஷன் மஜ்னு என்ற படத்தில் காலடி எடுத்து வைக்க தயாராக உள்ளார். இது மட்டும் இல்லாமல் தனது இரண்டாவது பாலிவுட் படமான குட் பை திரைப்படத்தில் புகழ்பெற்ற நடிகர் அமிதாப்பச்சனுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.