தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! 

0
161
#image_title

தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!!

பெங்களூருவில் தனியாக தங்கி வேலை பார்த்து வந்த தாய் மற்றும் மகன் இருவரும் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரூவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த நவநீதா என்ற பெண்ணுக்கும் கர்நாடக மாநிலம் பகலகுண்டே பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சந்துரு நவநீதா இருவருக்கும் ஸ்ருஜன் என்ற 8 வயது மகன் உள்ளார்.

நவநீதா அவர்கள் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கணவர் சந்துரு அவர்களுடன் நவநீதா அவர்களுக்கு அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் கணவர் சந்துரு அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நவநீதா அவர்கள் பெங்களூருவில் தனியாக வீடு எடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

பெங்களூருவில் நவநீதா அவர்கள் தனது 8 வயது மகன் ஸ்ரூஜன் அவர்களுடன் தங்கி வசித்து வந்தார். இதையடுத்து கணவர் சந்துரு அவர்களும் மனைவி நவநீதா தங்கியுள்ள வீட்டின் அருகே குடியேறினார். மேலும் அடிக்கடி குடிபோதையில் கணவர் சந்துரு மனைவி நவநீதா அவர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதையடுத்து வீட்டினுள் இருந்த நவநீதா அவர்களும் மகன் ஸ்ருஜன் அவர்களும் நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நவநீதா அவர்களின் வீட்டு வந்த காவல் துறையினர் வீட்டினுள் சென்று பார்த்த பொழுது நவநீதா அவர்களும் அவருடைய மகன் ஸ்ருஜன் அவர்களும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்தனர்.

இதையடுத்து தாய் நவநீதா மற்றும் மகன் ஸ்ருஜன் இருவருடைய சடலத்தையும் மீட்ட காவல் துறையினர் பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த நவநீதா அவர்களின் கணவர் சந்துரு அவர்களை சந்தேகத்தின் பெயரில் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Previous articleதன் மரணம் இப்படி தான் இருக்கும்.. முன்னரே நமக்கு உணர்த்திய எதிர்நீச்சல் மாரிமுத்து!!
Next articleஇயக்குநராக வேண்டும் என்பதற்காக ஊரைவிட்டு சென்னைக்கு ஓடிவந்தேன் – மாரிமுத்துவின் உருக்கமான பேட்டி!!