ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை! தாய் எடுத்த விபரீத முடிவு!

Photo of author

By Sakthi

கல்பாக்கத்தை அடுத்த நெய்க்குப்பை பகுதியை சேர்ந்தவர் பூபதி கட்டட ஒப்பந்ததாரர் இவருடைய மனைவி கோடீஸ்வரி இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் இரண்டரை வயதில் மகனும் இருக்கிறார்கள்.

மகன் ஹரிஹரசுதன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு வாய் பேச முடியாமல் இருப்பதால் அவருக்கு ஆக்குபேஷனல் தெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. மகனுடைய மருத்துவ சிகிச்சையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாததால், அவருடைய தாய் கோடீஸ்வரி மன உளைச்சலிலிருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரண்டரை வயது மகனை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்து விட்டு அவரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தகவலறிந்து வந்த சதுரங்கப்பட்டினம் காவல்துறை 2 பேரின் உடலையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. அதோடு காவல் துறையை சார்ந்தவர்கள் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இப்படியான நிலையில், இன்று காலை கோடீஸ்வரி சகோதரர் ரமேஷ் என்பவர் இருவரின் சாவில் சந்தேகமிருப்பதாக சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இதனை தொடர்ந்து கோடீஸ்வரியின் கணவர் பூபதி மற்றும் அவருடைய உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.