போண்டா பிரச்சனையால் வாயை விட்ட மாமியார்!! உயிரிழந்த மருமகள்!!

0
66
Mother-in-law lost her mouth due to Bonda problem!! Deceased daughter-in-law!!
Mother-in-law lost her mouth due to Bonda problem!! Deceased daughter-in-law!!

வேலூர் மாவட்டத்தில் ஒடுக்கத்தூர் அருகே வரதலம்பட்டு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 33. இவர் பெங்களூருவில் வேலை செய்து வருவதால் தனது வீட்டிருக்கு மாதம் ஒரு முறை தான் வந்து செல்வார். அவருக்கு ஆயிஷா என்ற 25 வயதுள்ள மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆனது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஆயிஷா மற்றும் அவரது மாமியார் இருவருக்கும் சண்டை நடப்பது அடிக்கடி இருந்துள்ளது. அப்போது கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர்களது வீட்டில்  போண்டா தயாரித்து அலமாரியில் வைத்திருந்தார்கள். அப்போது தனது குழந்தைகள் போண்டா வேண்டும் என்று அடம் பிடித்தால் தனது குழந்தைகளுக்கு அதை எடுத்து தந்துள்ளார். அப்போது அதை பார்த்த மாமியார் என் மகன் கஷ்டப்பட்டு சம்பாதித்து தரும் பணத்தை இப்படி வீண் செய்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதை கேட்ட மருமகள் தன்னை பார்த்து இப்படி ஒரு வார்த்தை கூறி விட்டார் என எண்ணி கழிவறையில் இருந்த ஆசீட்டை எடுத்து குடித்து விட்டார். அதை பார்த்த மாமனார் விரைவாக அவரை மீட்டு அவரின் இருசக்கர வாகனத்தில் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

அப்போது அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆயிஷா உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த இடத்தில் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleகேரம் உலக கோப்பை போட்டி!! மூன்று பதக்கங்களை வென்ற  தமிழக பெண் காஷிமா!!
Next articleபள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்!! பெரும் பரபரப்பு!! மாணவர்கள் வெளியேற்றம்!!