தன் நீண்ட நாள் கனவை நினைவாக்க பெற்ற குழந்தையை விற்க முயன்ற தாய்..!

Photo of author

By Parthipan K

ஹைதராபாத்தில் தன் நீண்ட கால கனவை நினைவாக்க 2 மாதங்களே ஆன குழந்தையை 45,000 ரூபாய்க்கு விற்க முயன்ற பெண் கைது.

ஹைதராபாத்தில் உள்ள ஹபீப் நகர் காவல்நிலையத்தில் செவ்வாய்கிழமை அன்று அப்துல் மஜீத் என்பவர் பிறந்து இரண்டு மாதங்களே ஆன தன் மகனை தனது மனைவி விற்க முயற்சிக்கிறார் என காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் காவலர்கள் விரைந்து இதுகுறித்து விசாரணை நடத்தியதில், இல்லை செல்லக்கூடிய தன் நீண்டகால கனவை நிறைவேற்றுவதற்காக பெற்ற குழந்தையை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்றது தெரிய வந்துள்ளது. உடனடியாக குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குழந்தையை விற்க முயன்ற தாயை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில், நீண்ட காலமாக மும்பைக்கு செல்ல விரும்பிய அவர் குழந்தையை தனியாக வளர்ப்பதில் சிரமங்களை சந்தித்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

மேலும் அந்த குழந்தையை 45,000 ரூபாய்க்கு வாங்க முயன்ற குடும்பத்தினர் ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தையை காவல்துறையினர் அவனின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர்.