இறந்த தாயை ஜன்னலில் அமர்ந்து பார்க்கும் இளைஞன்: அனைவர் மனதையும் கலங்கடிக்கும் புகைப்படம்

Photo of author

By CineDesk

உலகளவில் இதுவரை ஒரு கோடிக்கு மேலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த தாய் இறப்பு, அவரது மகனின் பாசம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற இளைஞரின் 73 வயதான தாய் ரஸ்மி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹெப்ரான் மாநில மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஜிகாத் அம்மாவைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தார். அவர் வந்த சில மணி நேரங்களிலேயே தாய் இறந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் ஜிகாத்-க்கு தெரிவித்திருக்கிறார்கள். இதனால், கதறி அழுத இளைஞர் தன் தாயை பார்க்க விடுமாறு மருத்துவரிகளிடம் கேட்டார். ஆனால் மகனை அனுமதித்தால் அவருக்கும் கொரோனா பரவி விடும் என்ற அச்சத்தில் தாயை பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.

தன் தாயை நேரில்கூட பார்க்க முடியாத இளைஞர் மருத்துவமனையின் கட்டிடத்தில் ஏறி இறந்துபோன தனது தாயை சோகத்தோடு பார்த்த காட்சி மருத்துவமனையில் இருந்தவர்களை கலங்கடித்தது.

30 வயதாகும் அந்த இளைஞன் தனது தாயை மருத்துவமனை ஜன்னலில் அமர்ந்து சோகத்தோடு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி அனைவருடைய மனதையும் கலங்கவைத்திருக்கிறது.