கணவனின் செயலால் விரக்தி மேலிட்டு 2 பிள்ளைகளை கொன்ற தாய்!

0
147
The paranoid allusions of the critics of this process were completely substantiated.
The paranoid allusions of the critics of this process were completely substantiated.

கணவனின் செயலால் விரக்தி மேலிட்டு 2 பிள்ளைகளை கொன்ற தாய்!

மாண்டியா தாலுக்காவில் கெரேகோடு ஹோப்ளி கௌவுட கேரே  தெருவை சேர்ந்தவர் க்ரிஷ்.  இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி சின்சனா வயது 33. இவர்களுக்கு ஆறு வயதில் மகேந்திரா என்ற மகனும் நான்கு வயதில் என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சன்சனா மனமுடைந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கணவனிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் நாகமங்களா தாலுகா உள்ள ஹுல்லேனஹள்ளி கிராமத்தில் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

அதன் பிறகு அவர் தனது கணவனிடம் செல்போன் மூலம் பேசி சமாதானம் அடையலாம், என்று பேச முயற்சிக்கும் போதும் அவரது கணவர் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனம் வருந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். தான் இறந்து விட்டால் தன் குழந்தைகள் அனாதை ஆகிவிடுவார்கள் என்று நினைத்த அவர் குழந்தைகளையும் சேர்த்துக் கொன்றுவிட திட்டமிட்டுள்ளார். அதன் காரணமாக நேற்று காலையில் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியவர்.

கிராமத்தின் அருகிலுள்ள ஏரிக்கு சென்றார். அங்கு ஏரியில் தனது மகன் மற்றும் மகளை தள்ளிக் கொலை செய்துவிட்டு அவரும், அதே ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி மிகவும் அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி நாகமங்களா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து, தீயணைப்புப் படையினருடன் சேர்ந்து ஏரியிலிருந்து சின்சனா மற்றும் குழந்தைகளின் உடல்களை மீட்டனர். அதன்பின் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதெலுங்கு படத்தில் கலக்கும் அர்ஜுன் தாஸ்!! விக்ரம்  படத்தில் தொடர்வாரா??
Next articleஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் தேர்வானது வரலாற்று சாதனை – அமைச்சர் மெய்யநாதன்!