“அறம் நாடு என்ற யூடுப் சேனலுக்கு பிரபல தயாரிப்பாளர் ‘பாலாஜி’ பேட்டி ஒன்று தந்துள்ளார். அதில் அந்த காலத்தில் எந்த ஒரு போட்டியும் இல்லாமல் வெற்றி பெற்ற கூட்டணி என்றால் அது எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் கண்ணதாசன் ஜோடி தான்”. அவர்களின் இருவரின் உழைப்பில் வந்த பாடல்கள் மிக தனித்துவம் வாய்ந்த வெற்றியை பெறும். இக்காலத்திலும் அவர்கள் பாடல்களுக்கு ரசிகர்கள் உண்டு. அவர்களைத் தவிர, எந்த கூட்டணியும் இதுவரை வெற்றி பெறவில்லை என்றார்.
குறிப்பாக ‘மைக் மோகன் அவர்களின் மோகனமான வாய்ஸ்க்கு உரிமையாளர் நடிகர் விஜயின் மாமாவும், பின்னணி பாடகருமான எஸ்.என். சுரேந்தர். இவர்களின் கூட்டணி பல நாட்களாக ரசிகர்களை கவர்ந்து வந்தது’.அப்படி இருக்க ‘என் குரலால் தான் உன் நடிப்பு நன்றாக உள்ளது என சுரேந்தரும், என் நடிப்பால் தான் உங்கள் குரல் மிளிர்கிறது’ என இருவரும் மோதினர். எஸ்.என். சுரேந்தரால் தான் மோகனுக்கு புகழா? மோகனால் தான் சுரேந்தருக்கு புகழா?’ என பேசும்போதே அந்த கூட்டணி உடைந்து போனது. அப்போது இருவரும் பிரிந்தார்கள். அதன் பின் என்ன ஆனார்கள்? இருவரும் மார்க்கெட்டை இழந்தனர்.
‘இதே போல தான் வைரமுத்துக்கும், இளையராஜாவுக்கும் நடந்தது. இருவரின் இணைப்பில் வெளிவந்த பாடல்கள் அமோக வரவேற்பு பெற்றது’. “என்னுடைய மெட்டால் தான் பாடல் ஹிட்டானது என்றார் வைரமுத்து. என்னுடைய இசை நாள் தான் பாடல் ஹிட் ஆனது என்றார் இளையராஜா”.
இளையராஜா ‘இசை இல்லாத பாடல்களுக்கு வைரமுத்து பாடிய பாடல்கள் கூட ஜெயித்தன. வைரமுத்து எழுதாத பாடல்களுக்கு இசையமைத்து இளையராஜா தான் வெற்றி பெறவில்லையா?’ என்றார். ‘வைரமுத்து இளையராஜா இருவரும் இணைந்து ஆறு வருடங்கள் மட்டும்தான் பணியாற்றியுள்ளார்கள். ஆனால் இவர்கள் கூட்டணியில் அமைந்த பாடல்களை அனைத்தும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இருவருமே திறமைசாலிகள்… இருவரும் இணைந்தால் பல அற்புதங்கள் நடக்கும்’ என்றார்.