வாகன ஓட்டிகளின் ஆவணங்களை இனி சரிபார்ப்பு இல்லை ! டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்கும் மக்கள்!
போக்குவரத்துத்துறை போலீசார் வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆவணங்களை சரிபார்ப்பது வழக்கம். வாகன ஓட்டிகளுடன் லைசென்ஸ், ஆர்சி புக் ,இன்சூரன்ஸ் முதல் அனைத்து ஆவணங்களை சரியான முறையில் அளிக்குமாறு கேட்கிறார்கள். இதில் வாகன ஓட்டிகள் சரியான ஆவணத்தை வைத்திருக்க வில்லை என்றால் அபராதம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதனால் வாகன ஓட்டிகள் ஆவணம் சரிபார்க்கும் என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தி பணம் வசூலிக்க தொடங்கினர். இதனால் அவசர அலுவலகம் செல்வோர் அல்லது வேறு பணிக்கு செல்வதற்கு பெரும் இடையூறு ஏற்படுத்துகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதுபோன்ற வாகன சோதனைகளுக்கு டிஜிபி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநில போலீசாக இருப்பவர் பிஜிபி பிரவீன் ஷூட்.
இவருக்கு பெங்களூரை சேர்ந்த ஸ்ரீவாஸ்தவ் வாஜபேயம் என்பவர் நேற்று முன்தினம் ட்விட்டர் மூலம் டிஜிபிக்கு புகார் அளித்துள்ளார். பிஜிபி பிரவீன் ஷூட் கமிஷனராக இருந்த போது பெங்களூரில் தேவையில்லாத ஆவணங்களை சரிபார்க்கும் என்ற பெயர் வாகன ஓட்டிகளை தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தற்போது கர்நாடக மாநில டிஜிபியாக மாறி உள்ளீர்கள்.இதனால் நீங்கள் பெங்களூரில் பிறப்பித்த உத்தரவை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இதற்கு முன்பாக காவல்துறையினர் வேண்டுமென்று ஆவணங்கள் சரிபார்க்கும் எனும் பெயரில் அலைய விடுவது, முன் விரோதம் உள்ளவர்களை போலீசார் இதை சாக்காக வைத்து பழி வாங்குவதாகவும் கூறியிருந்தார்.