வாகன ஓட்டிகளே நோட் பண்ணிக்கோங்க.. நாளை நள்ளிரவு முதல் சுங்கக்சாவடி கட்டணம் உயர்வு!!

Photo of author

By Divya

வாகன ஓட்டிகளே நோட் பண்ணிக்கோங்க.. நாளை நள்ளிரவு முதல் சுங்கக்சாவடி கட்டணம் உயர்வு!!

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளது.இதில் 339 மாநில சுங்கச்சாவடிகளாகும்.ஆண்டு தோறும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது இருமுறை சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி வருகிறது.அதன்படி முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதத்திலும் மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் சுங்கச்சாவடி கட்டணம் உயரும்.

அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதம் 01 ஆம் தேதி முதன்மை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என்ற தகவல் வெளியானது.அதன் பின்னர் மார்ச் 30 அன்று நாடாளுமன்ற தேர்தல் காரணமாக சுங்க கட்டண உயர்வு 2 மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.இந்நிலையில் இன்று(ஜூன் 01) நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நாளை(ஜூன் 03) நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 55 சுங்கச்சாவடிகள் உள்ளது.இந்நிலையில் முதற்கட்டமாக அரியலூர் மணகெதி,திருச்சி கல்லக்குடி,வேலூர் வல்லம்,திருவண்ணாமலை இனம் கரியாந்தல்,விழுப்புரம் தென்னமாதேவி ஆகிய ஐந்து சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்த்தப்படவுள்ளது.

மேலும் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்கிறது.இது தவிர மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரை அதிகரிக்க உள்ளது.