பனிப்பாறைக்குள் சிக்கிய மலையேற்ற வீரர்… 37 ஆண்டுகளுக்கு பிறகு சடலமாக மீட்பு…

0
157

 

பனிப்பாறைக்குள் சிக்கிய மலையேற்ற வீரர்… 37 ஆண்டுகளுக்கு பிறகு சடலமாக மீட்பு..

உருகும் பனிப்பாறைக்கு அடியில் சிக்கிய மலையேற்ற வீரர் ஒருவரின் உடல் 37 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

தென் மத்திய ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக நீளமாக பரவி இருக்கும் மலைத் தொடராக ஆல்ப்ஸ் மலைத்தொடர் உள்ளது. இந்த ஆல்ப்ஸ் மலைத் தொடர் 8 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி உள்ளது. இந்த ஆல்ப்ஸ் மலைத்தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ளது. ஆல்ப்ஸ் மலைத் தொடரில் உள்ள ஆபத்தான பகுதியில் மலையேற்றத்தில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த ஆல்ப்ஸ் மலைத் தொடரில் மலையேற்றத்திற்காக செல்லும் பொழுது பலர் அங்கேயே சிக்கி காணமல் போகின்றனர். மேலும் அங்கேயே இறந்தும் விடுகின்றனர். இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மலையேற்ற வீரர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி சுவிட்சர்லாந்தின் ஜெர்மாட்டில் உள்ள தியோடுல் பனிமலையை கடந்து சென்ற மலையேற்ற வீரர்களால் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்கள் அருகில் உள்ள வலாய்ஸ் மருத்துவமனைக்கு தடயவியல் மருத்துவ பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

 

அந்த மருத்துவமனையில் உடல் பாகங்களை டி.என்.ஏ பகுப்பாய்வு செய்யப்பட்டது. டி.என்.ஏ பகுப்பாய்வின் முடிவில் 1986ம் ஆண்டு காணாமல் போன 38 வயதான மலையேற்ற வீரர் ஒருவரின் உடல் பாகங்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் மலையேற்ற வீரர் இறந்த சூழ்நிலை குறித்த தகவல்கள், இறந்த மலையேற்ற வீரரின் அடையாளம் எதுவும் காவல்துறை வழங்கவில்லை.

 

எனினும் காணமல் போன மலையேற்ற வீரரின் உடல் இருந்த பனிப்பாறைக்கு அடியில் இருந்து நீண்ட காலனி, மலையேற்றத்திற்கு பயன்படுத்தும் உலோகக் கொக்கிகள் ஆகியவற்றின் புகைப்படங்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

 

Previous articleஉலக அளவில் 9 வது இடம்… மூன்று நாடுகளில் முதல் இடம் பிடித்த மாமன்னன்… இயக்குநர் மாரி செல்வராஜ் மகிழ்ச்சி!!
Next articleபூனைக்குட்டி புலியாக மாறிய கதை… ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!!