“சமீபத்தில் ‘கிறிஸ்துமஸ்க்கு ‘ வெளியான ‘பேபி ஜான்’ படம் பெரும் தோல்வியை கண்டுள்ளது”. அட்லியின் படம் குறித்தும், இப்பட தோல்வி குறித்த கருத்துகள் பின்வருமாறு:
‘பிரபல இயக்குனர் ‘அட்லி’ இயக்குனர் ‘சங்கரின் உதவியாளராக’ பணிபுரிந்து வந்தவர். தமிழ் திரையுலகில் ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து, பிரபல நடிகர் தளபதி விஜய் நடிப்பில் ‘தெறி’ படத்தை இயக்கினார். பிறகு ‘மெர்சல், பிகில் அடுத்தடுத்த விஜய் படங்களை இயக்கினார்’. இதில், ‘மெர்சல் மிகப்பெரிய வெற்றி தழுவியது’. இதன் வெற்றியை தொடர்ந்து, ‘பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கினார்’.
இது நேர்முக விமர்சனத்தோடு, ‘ஆயிரம் கோடி வசூல் செய்தது. இதன் வெற்றி கண்டு பாலிவுட்டிலும் முக்கியமான இயக்குனராக மாறினார் அட்லீ. பின்னர் பாலிவுட்டில் ‘தெறி பட ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தை தயாரித்துள்ளார்’. இந்த படம் பெரும் தோல்வியை கண்டுள்ளது. இவருக்கு இந்த படத்தின் மூலம் ‘100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’.
‘இதற்குக் காரணம் “Netflix, OTT போன்ற தளங்களில் தற்சமயம் வெளியாகும் படங்கள் அனைத்து மொழிகளிலும் சப்டைட்டிலுடன் வெளி வருகிறது”. இதன் காரணமாகவே, ‘இந்த remake படம் தோல்வியை கண்டுள்ளது’. இனி வரும் காலங்களில், ‘பழைய படங்களை ரீமேக் செய்வதனால் படக்குழுவினருக்கு, தோல்வியே ஏற்படும்’ என இப்படம் நிரூபித்துள்ளது. இவ்வளவுக்கும், ‘இந்த படம் விடுமுறை நாட்களில் வந்தும் தோல்வி அடைந்துள்ளது’ என்பது குறிப்பிடத்தக்கது’.