தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் டேட்  அறிவிக்கப்பட்டுவிட்டது!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Photo of author

By Parthipan K

வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் படம் ரிலீசாக உள்ளது. இந்த அறிவிப்பை கேட்ட தனுஷ் ரசிகர்களும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில்  கதாநாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி, மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் கலையரசன் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் சஷிகாந்த் தனது வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பின்னர் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு பின்னணி இசையமைக்கிறது.

அதிரடி படமாக உருவாகும் இப்படத்தினை கதை ஆசிரியராக தனுஷ் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார்.

இப்படி பல சுவாரஸ்யங்கள் நிறைந்த ஜகமே தந்திரம் என்ற படத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.