பாஜக பெண் வேட்பாளரை இறக்குமதி ஐட்டம் என கூறிய எம்பி!!

Photo of author

By Vinoth

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிவசேனாவின் வேட்பாளராக ஷைனா என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்  தேர்தல் சீட்டுகாக பாஜகவில் இருந்து சிவசேனாவுக்கு கட்சி மாறியது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அவர் அந்த தொகுதியில் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, ஷைனாவுக்கு பாஜகவில் சீட் கிடைக்காததால் அவர் சிவசேனாவில் இணைந்ததாகவும், இதுபோன்ற “இறக்குமதி ஐட்டங்களை” கட்சியில் ஏற்றுக்கொள்வதால் அவர் வேட்பாளராக உள்ளதாகவும் ஆபாசமாக கருத்து தெரிவித்தார். அவர் கூறிய அந்த சொல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திதுள்ளது.

மேலும் ஷைனா போலீஸ்யில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அவரை போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியகிள்ளது. பெண் வேட்பாளரை “இறக்குமதி ஐட்டம்” என உத்தவ் தாக்கரே கட்சியின் எம்பி அரவிந்த் சாவந்த் ஆபாசமாக விமர்சனம் செய்திருப்பது மகாராஷ்டிரா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.