மாநிலங்களவை எம்பி அமர்சிங் சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழப்பு
சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் அமர் சிங் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.64 வயதாகும் இவருக்கு பங்கஜா என்ற மனைவியும் மற்றும் இரட்டை மகள்கள் உள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு சிறுநீரகம் தொடர்பான நோயினால் இவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.மார்ச் மாதம் சிறுநீரக கோளாறு தொடர்பான அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் இவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை இவர் தற்போது ஐசியூவில் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் அமர்சிங் பக்கத்திலேயே இருப்பதாகவும் ஒரு அறிக்கையினை வெளியிட்டது.தற்போது இவர் இறந்த செய்தி அவரது குடும்பத்தினர் இடையையும் கட்சியினர் இடையேயையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்திடமிருந்து விலகி பின்னர், சமாஜ்வாதி கட்சியில் அமர் சிங் ஒரு முக்கிய தலைவராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.