100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் குறைந்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அரசு சார்பில் பதில்?

0
98

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் குறைந்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அரசு சார்பில் பதில்?இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நேரத்தில் விவசாயத்திற்கு அதிகமாக ஆட்கள் தேவைப்படுவதால்,மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புக்கு அதிகமாக பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதத்தை பொறுத்தவரை இது மிகவும் குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கிராமங்களில் மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு காலத்திலும் தொடங்கியுள்ளனர்.

இதற்கான வழிமுறைகளை ஆன்லைன் மூலமாக தெரிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை தமிழ்நாட்டில் பெரிதும் வரவேற்கின்றனர்.விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக விவசாய நிலங்களுக்கு அழைத்து வரப்பட்டு,அங்குள்ள பணியில் ஈடுபடுத்த இயலும் எனக் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக விவசாய மக்கள் தவித்து வரும் இச்சூழலில் இது பெரிதும் உதவியாக இருக்கும் என்று எண்ணப்படிக்கிறது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 100 நாள் வேலைக்கு அதிக தேவை இருந்தாலும், பருவ மழை தொடங்கியதால் மக்கள் பயிர் நடதொடங்கியுள்ளனர்.
விவசாயத்திற்கு அதிகளவில் மக்கள் சென்றதால் கடந்த ஜூலை மாதத்தில் 100 நாள் வேலைக்கு மக்கள் அதிகளவில் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

100நாள் வேலைத்திட்டத்தில்
ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை இந்த திட்டத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 31.5 லட்சம் குடும்பமாக உள்ளது. இதற்கு முந்தைய ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 28 சதவீதம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் 71 சதவீதம் அதிகமாக இந்த ஆண்டு பணி செய்ததாக கூறப்படுகிறது.2019, ஜூலை மாதத்தில் 18.4 லட்சம் குடும்பங்கள் 100 நாள் வேலைக்கு பதிவு செய்து இருந்தனர். வேலை நாட்களின் கணக்கு அடிப்படையில் ,கடந்த ஜூலை மாதத்தில் மட்டுமே 245.23 லட்சம் பேர்க்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுளாதாகவும், நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை வரை மொத்தம் 1.6 கோடி மக்கள் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனார்.இந்த திட்டத்தில் ஒப்பிடுகையில் 1,01,500 கோடியில் இருந்து 50 சதவீதம் கடந்த நான்கு மாதங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், கடந்த 2019ஆம் ஆண்டில் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் ஜூலை மாதத்தில் 71 சதவீதம் அதிகமாக 100 நாள் வேலைக்கு பதிவு செய்துள்ளனர். 2019, ஜூலை மாதத்தில் 18.4 லட்சம் குடும்பங்கள் 100 நாள் வேலைக்கு பதிவு செய்து இருந்தாகவும்,நாள் கணக்கு அடிப்படையில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 245.23 கோடி பேர்க்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை வரை மொத்தம் 1.6 கோடி பெர் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு திட்டத்துக்கு என ஒதுக்கப்பட்ட 1,01,500 கோடியில் இருந்து 50 சதவீதம் கடந்த நான்கு மாதங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.

author avatar
Parthipan K