தமிழகத்தில் சட்டசபை தேர்தல் சென்ற மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற தேமுதிக கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முனுசாமியும் திமுக சார்பாக போட்டியிட்ட முருகனும் நேருக்கு நேர் சந்தித்தார்கள். இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முனுசாமி வெற்றி அடைந்தார். அதேபோல தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இவர்கள் இருவரும் இதற்கு முன்னரே மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி மற்றும் சட்டசபை உறுப்பினர் பதவியை இருவருமே பெற்றிருக்கிறார்கள் எந்த பதவியை தக்கவைத்துக் கொள்வது எந்த பதவியை ராஜினாமா செய்வது என்பது தான் மிகப்பெரிய சிக்கலாக இருந்து வருகிறது. ஒருவேளை சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் அதேபோல பதவியை ராஜினாமா செய்தலும் தேர்தல் நடைபெறும் எப்படியானாலும் விரைவில் தமிழகம் இடைத் தேர்தலை சந்திக்க தான் இருக்கிறது என்பது மட்டும் உண்மையாக இருக்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில், நாளை வெற்றி அடைந்தவர்கள் சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்க இருக்கிறார்கள் இந்த நிலையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகிய இருவரும் தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.