நான் என்ன நினைக்கிறேனோ அதை மட்டும் தான் செய்வேன் என துணிச்சலாக செய்யக்கூடியவர் நடிகர் எம் ஆர் ராதா. பெரியாரின் உடைய கடவுள் மறுப்பு கொள்கைகளை தன்னகத்தே கொண்டு தன்னுடைய நாடகங்களிலும் அதையே போதித்தவர்.
எந்த இடமாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தான் என்ன நினைக்கிறேனோ அதை மட்டும் தான் செய்வேன் என துணிச்சலான மனதுடன் செய்யக்கூடிய இவர் தன்னுடைய பல நாடகங்களை நடத்தக்கூடாது என எதிர்ப்புகள் கிளம்பிய பொழுதும் நாடகத்தின் பெயரை மாற்றி விட்டு அதே கதையை நாடகமாக போடக்கூடியவர்.
ஒருமுறை எம்ஜிஆரை சுட்ட பொழுது இவரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று இருக்கின்றனர். நீதிமன்றத்தில் நீதிபதி அவர்கள், உங்களது துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருக்கிறதா என கேட்க நான் சுட்ட எம்.ஜி.ஆர் அவர்களும் சாகவில்லை என்னை நானே சுட்டுக் கொண்டேன் நானும் சாகவில்லை இப்படிப்பட்ட துப்பாக்கிக்கு எதற்கு லைசன்ஸ் என நீதிபதி அவர்களையே திருப்பி கேட்டிருக்கிறார்.
இது மட்டுமல்லாது திருப்பதிக்கு வெடிகுண்டு வைப்பதற்காக மருந்துகளை திருப்பதிக்கு எடுத்து சென்று காய வைக்கும் பொழுது சிறிய அளவு விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதனை கட்டாயமாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கக்கூடிய ஒருவராகவே எம் ஆர் ராதா கடைசிவரை வாழ்ந்து காட்டி விட்டார்.