என் பின்பகுதி அந்த மாதிரி இருக்கிறது என்று ஒப்பான சொல்லுறாங்க – பிரபல நடிகை பேச்சு!!
கடந்த 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “சீதா ராமம்” படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மிருனாள் தாக்கூர்.ஹிந்தியில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி கிடைக்கின்ற ரோல்களில் நடித்து வந்த நிலையில் சீதா ராமம் படத்தில் நடித்ததன் மூலம் தென் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வரத் தொடங்கி இருக்கிறார்.
தொடர்ந்து ஹாய் நானா,பேமிலி ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்த தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.தெலுங்கை தொடர்ந்து தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வர இருக்கிறார்.தமிழில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
சீரியலில் அறிமுகமாகி தனது அயராத உழைப்பால் தென்னிந்திய திரையுலகில் பேமஸான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மிருனாள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை உருவ கேலி செய்கிறார்கள் என்று தெரிவித்து இருக்கிறார்.
தனது பின் பகுதி அகலமாக இருப்பதால் என் உடல் பேரிக்காய்(Pear) வடிவில் இருக்கிறது என்று கேலி செய்கிறார்கள்.தான் உடல் ரீதியாக பல கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறேன்.இது போன்ற உருவ கேலி தனக்கு புதிது அல்ல.என் உடல் பியர் ஷேப்பில் இருக்கிறது என்ற கேலி கிண்டலுக்காக தான் அதை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்ற மிருனாள் பேச்சுக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.